புதன்கிழமை 22 மே 2019

புகார் கொடுத்தவரிடம் லஞ்சமாக ஐ-போன் வாங்கிய காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

DIN | Published: 23rd April 2019 11:56 AM


சென்னை: புகார் கொடுத்தவரிடம் லஞ்சமாக ஐ-போன் வாங்கிய காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புகார்தாரர் மனு மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ஐ-போன் வாங்கிக் கொடுக்கும்படி சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஐ-போனை வாங்கிக் கொண்டு புகார் மனுவை கிடப்பில் போட்டதாக மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, லஞ்சமாக ஐ-போனை வாங்கிய சுரேஷை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து கூடுதல் ஆணையர் திவாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்: சுப. உதயகுமார் கைது
வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுமதியின்றி இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக புகார்: மதுரையில் திடீர் பரபரப்பு
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
அக்னி நட்சத்திரம் நிறைவு: பழனியில் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் - 2 பி செயற்கைக்கோள்