செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் பலி

DIN | Published: 23rd April 2019 05:53 PM


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

பொத்தனூரைச் சேர்ந்த சரவணன் (45), மனைவி ஜோதிமணி (35), இவர்களுடைய இரட்டை மகன்கள் தீபகேஷ், சாரகேஷ் ஆகியோர், ஜோதிமணியின் தோழி தேவிஸ்ரீ (35)  மற்றும் அவரது மகள் ஹஷ்விகா (7)வுடன் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

கரூர் - நாமக்கல் எல்லைப் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேரும் திடீரென ஆற்றின் மிக ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் இரட்டையர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 4 பேரை தேடும் பணி நடந்து வந்தது. அதில் ஜோதிமணி, சரவணன், தேவிஸ்ரீ ஆகிய 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், சிறுமி ஹஸ்விகாவை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் ஆற்றுப் பகுதியில் குவிந்தனர்.

ஆற்றில் காகிதத் தொழிற்சாலையால் ஏற்பட்ட பள்ளமான பகுதிக்கு இரண்டு சிறுவர்களும் சென்றதால்தான் அவர்களைக் காப்பாற்ற அடுத்தடுத்து சென்று 6 பேரும் நீரில் மூழ்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வாகனங்களுக்குத் தகுதிச்சான்று வழங்க பிரத்யேக செயலி: போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியா?
காஷ்மீர் விவகாரம்: ஆக.22-இல் தில்லியில் எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வழக்கை திமுக திரும்பப் பெற்றால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார்: அமைச்சர் கே.சி.கருப்பணன்
தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும்: பொன்.ராதாகிருஷ்ணன்