வியாழக்கிழமை 23 மே 2019

நாமக்கல்: பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு

DIN | Published: 23rd April 2019 11:32 AM


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் பள்ளி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 4 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. 

ஆற்றில் குளிக்க வந்தவர்கள் ஒரு ஆண், 2 பெண்கள், 3 சிறார்கள் என்று கூறப்பட்டது. ஒரு சில தகவல்கள் 6 பேரும் பள்ளிச் சிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுவரை எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பள்ளமான பகுதிக்கு 6 பேரும் சென்றதால், இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து
தமிழக சட்டபேரவை இடைத்தேர்தல்: அதிமுக 12; திமுக 10 தொகுதிகளில் முன்னிலை 
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை
மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர் விவரம்!
மக்களவைத் தேர்தல்: போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தேமுதிக பின்னடைவு