திங்கள்கிழமை 20 மே 2019

கூட்டுறவு சங்கங்கள் இளநிலை ஆய்வாளர் பதவி: ஏப் 25 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

DIN | Published: 23rd April 2019 06:00 AM


கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது. 
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்ப தாரர்களின்  பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரும் 25 முதல் மே 6-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்னர் அசல் சான்றிதழ்களை  ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி,  அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் அச்சம்
அமைதியாக முடிந்தது 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம் 
காஞ்சி மகா பெரியவர் ஜயந்தி மகோற்சவம்: தங்கத்தேரில் பவனி வந்த மகா பெரியவர்
மருத்துவமனைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி: அரசு மருத்துவர்கள் ஆட்சேபம்