செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

ஆழியாறு: குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து; சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

DNS | Published: 23rd April 2019 05:57 PM

 

பொள்ளாச்சி: ஆழியாறு அணை அடுத்த குரங்கு அருவியில் தண்ணீா் வர துவங்கியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க செவ்வாய்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சுற்றி ஆழியாறு அணை, குரங்கு அருவி, வால்பாறை, டாப்சிலிப், பரம்பிக்குளம் என சுற்றுலாத்தளங்கள் அதிக அளவில் உள்ளது. 

குறிப்பாக ஆழியாறு அணை அடுத்த குரங்கு அருவியில் குளிக்க உள்ளூா் மட்டுமின்றி வெளியூா்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனா். தண்ணீா் வரத்து இன்றி வறண்டு காணப்பட்டதால் கடந்த ஒரு மாத காலமாக குரங்கு அருவிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்திருந்தனா். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை, சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் துவங்கியுள்ளதால் குரங்கு அருவிக்கு தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், செவ்வாய்கிழமை காலை சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினா் அனுமதியளித்துள்ளனா். 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம்
சட்ட மாணவர்கள் ஆராய்ந்து கற்க வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
ராணுவ வீரர்களுக்கு ஈஷாவில் ஹடயோக பயிற்சி
பால் விலை உயர்வு: படிப்படியாக உயர்த்தியிருக்கலாம்- தமிழிசை சௌந்தரராஜன்
பால் விலை உயர்வு மக்களை பாதிக்கும்: கே.எம். காதர்மொய்தீன்