புதன்கிழமை 22 மே 2019

பெரியகுளத்தில்  துணை முதல்வர் வாக்களிப்பு

DIN | Published: 19th April 2019 03:02 AM
பெரியகுளம் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.


தேனி மாவட்டம், பெரியகுளம் வாக்குச்சாவடியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
 பெரியகுளம் தொகுதிக்கு உள்பட்ட தெற்கு அக்ரஹாரம் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசித்து வருகிறார். இப்பகுதிக்கு உள்பட்ட செவன்த்டே பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை 9.20 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலெட்சுமி, மகன்கள் ப.ரவீந்திரநாத்குமார் (தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்),  வி.ப.ஜெயப்பிரதீப் மற்றும் தம்பி சுந்தர் ஆகியோருடன் சென்றார்.  வாக்குசாவடியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 30 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து   தனது வாக்கைப் பதிவு செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்: சுப. உதயகுமார் கைது
வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுமதியின்றி இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக புகார்: மதுரையில் திடீர் பரபரப்பு
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
அக்னி நட்சத்திரம் நிறைவு: பழனியில் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் - 2 பி செயற்கைக்கோள்