செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

குரூப்-1 பணி நியமன விவகாரம்:  தனி நீதிபதி உத்தரவு ரத்து

DIN | Published: 13th April 2019 03:04 AM


டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவரின் விண்ணப்பத்தில் தவறு உள்ளதாகக் கூறி பணி நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த  உத்தரவை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது.  
கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற ரிசர்வ் வங்கி ஊழியரான மனோஜ் குமார், தான் அரசுப்பணியாளர் இல்லை என தேர்வுக்கான விண்ணப்பித்தில் குறிப்பிட்டிருந்ததால், அவருக்கு பணி நியமனம் வழங்க டிஎன்பிஎஸ்சி மறுத்து விட்டது. டிஎன்பிஎஸ்சியின் இந்த உத்தரவை எதிர்த்து மனோஜ் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி எடுத்த முடிவு சரியானது தான் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, மனோஜ்குமார் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. 
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் , பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட  அமர்வில்  அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ரிசர்வ் வங்கிப்பணி அரசுப்பணி அல்ல. அங்கு பணி புரிபவர்களை அரசுப் பணியாளர்களாகக் கருத முடியாது. எனவே மனுதாரர் தான் அரசு ஊழியர் இல்லை என விண்ணப்பத்தில் சரியான தகவலைத் தான் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் ஏற்கெனவே நேரமுகத்தேர்வில் பங்கேற்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பதவி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென விண்ணப்பத்தில் தவறு உள்ளதாக கூறி அவருக்கு பணி நியமனம் வழங்கப் படவில்லை. எனவே மனுதாரருக்கு ஒரு வார காலத்துக்குள் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

1,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூபாய் 10 கோடி ஒதுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவினை நிறைவேற்றிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை
கன்னியாகுமரியில் ரூ 16 கோடி மதிப்பீட்டில் தென்னை மதிப்புக்கூட்டு மையம் அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு