நான் கேட்ட கேள்விக்கு முகம் திருப்பிக் கொண்ட பெண் காவலர்கள்: பொதுக்கூட்ட மேடையில் ஸ்டாலின் 

நான் கேட்ட கேள்விக்கு பெண்காவலர்கள் வெட்கப்பட்டு முகம் திருப்பிக் கொண்டார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடையில் தெரிவித்தார்.
நான் கேட்ட கேள்விக்கு முகம் திருப்பிக் கொண்ட பெண் காவலர்கள்: பொதுக்கூட்ட மேடையில் ஸ்டாலின் 

பொள்ளாச்சி: நான் கேட்ட கேள்விக்கு பெண்காவலர்கள் வெட்கப்பட்டு முகம் திருப்பிக் கொண்டார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடையில் தெரிவித்தார்.

வியாழனன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போதுஅவர் பேசிய ஒரு விவரம் பின்வருமாறு:

கோவையில் தங்கியிருந்த நேரத்தில் அறையில் இருந்து வெளியில் வரும்பொழுது இரண்டு பெண் காவலர்கள் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்படுகின்றார்கள் என்று என் உதவியாளர்கள் சொன்னார்கள். நான் ஒரு மரியாதைக்காக எந்த ஊர் நீங்கள் என்று கேட்டேன்? அப்படியே வெட்கப்பட்டு இருவரும் திரும்பிக் கொண்டார்கள். அதன்பிறகு சொன்னார்கள், பொள்ளாச்சி என்று. பொள்ளாச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு நாட்டில் வந்துள்ளது. எனவே, தன் ஊர்ப்பெயரையே சொல்ல வெட்கப்படும் அளவிற்கு மோசமாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் யார்? என்று தயவு கூர்ந்து நீங்கள் கூர்ந்து பார்த்திட வேண்டும்.

எனவே, காவல்துறை எந்தத் தவறும் செய்யவில்லை, நாங்கள் நேர்மையான நடவடிக்கை எடுத்து இருக்கின்றோம் என்று ஒரு பக்கத்தில் சொல்லுகின்றார்கள். கடந்த 10 நாட்களாக அவர்கள் சொன்னது அத்தனையும் பொய் என்பதை இப்பொழுது நிரூபித்துக்கொண்டு வருகின்றார்கள். எப்படி என்று கேட்டீர்கள் என்றால் கோவை மாவட்டத்தின் போலீஸ் எஸ்.பி.பாண்டிய ராஜனை கட்டாய காத்திருப்பில் இப்பொழுது வைத்திருக்கின்றார்கள், எந்த வேலையும் கிடையாது. அதேபோல், பொள்ளாச்சி எஸ்.பி.ஜெயராம் மாற்றப்பட்டிருக்கின்றார். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடேசன் அவரும் மாற்றப்பட்டிருக்கிறார்.

நான் கேட்கின்றேன் காவல்துறை தவறு செய்யவில்லை என்று சொன்னால், எதற்காக இங்கிருந்து அவர்கள் எல்லோரும் மாற்றப்பட்டு இருக்கின்றார்கள். இந்த விவகாரத்தைப் பற்றி நான் பேசிய காரணத்தினால் மாற்றியிருக்கின்றார்கள். ஏனென்றால், அவர்கள் இங்கு இருந்தால், முழு உண்மைகள் வெளிவராது. சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரிப்பது இப்பொழுதும் கண் துடைப்புதான்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com