ஜேட்லி - மல்லையா ரகசிய பேச்சுவார்த்தையை பிரதமர் விளக்க வேண்டும் - ஸ்டாலின்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி - விஜய் மல்லையாவின் ரகசிய பேச்சுவார்த்தையை பிரதமர் மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி - விஜய் மல்லையாவின் ரகசிய பேச்சுவார்த்தையை பிரதமர் மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

இந்திய பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா பிரிட்டனுக்கு தப்பிவிட்டார். கடந்த 2016, மார்ச்சில் இந்தியாவைவிட்டு வெளியேறிய அவரை, நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை லண்டன் நீதிமன்றம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஆஜராவதற்காக வந்த விஜய் மல்லையா, செய்தியாளர்களிடம் கூறுகையில், 

"இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக அவரிடம் பலமுறை தெரிவித்தேன். இதுதான் உண்மை" என்றார். 

இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், 'தன்னை சந்தித்துப் பேசியதாக விஜய் மல்லையா கூறுவது உண்மையல்ல' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அதற்கு மறுப்பு தெரிவித்தார். 

இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்த சந்திப்பு உறுதியானது என்ற வகையில் சுட்டுரையில் பதிவிட்டு சர்ச்சையை மேலும் வலுக்கச் செய்தார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது, 

"வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது!

பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும்! இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்!"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com