வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு மேலும் நிதி வழங்கும்

DIN | Published: 07th December 2018 01:58 AM


கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு அடுத்தகட்டமாக நிதி வழங்கும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 
சிதம்பரத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
நெல் ஜெயராமன் மறைவு தமிழகத்துக்கும், விவசாயிகளுக்கும் பேரிழப்பாகும். புதுவை நியமன எம்எல்ஏக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்துள்ளது. 3 நியமன எம்எல்ஏக்களை ஜனநாயகக் கடமையாற்றவிடாமல் தடுத்த புதுவை மாநில காங்கிரஸ் அரசு பகிங்கர மன்னிப்புக் கோர வேண்டும்.
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு அடுத்தக்கட்டமாக நிதி வழங்கும். காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்கு காங்கிரஸ், திமுக கட்சியினருக்கு தகுதி இல்லை. இதுகுறித்து விவாதம் நடத்த தயாராக உள்ளேன்.150 ஆண்டு கால காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. 
மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதுகுறித்த ஆய்வுக்குத் தான் அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் எடுக்கும் நடவடிக்கைகள் நியாயமாக இருக்கும்பட்சத்தில் அதை ஆதரிப்பதில் தவறில்லை. 13 கடலோர மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.
 

More from the section

அரசியல் உதவாக்'கரைகள்' உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும்: கட்சியின் முதல் ஆண்டில் கமல் முழக்கம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்