சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

லேசான மழைக்கு விடுமுறை வேண்டாம் : பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

DIN | Published: 06th December 2018 01:23 AM


லேசான மழைக்கு விடுமுறை விடக் கூடாது என்பது உள்பட மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். 
மழை பெய்தால், உடனடியாக விடுமுறை அறிவிக்கக் கூடாது. மழையால் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழையை பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாக விடுமுறை அறிவிக்க வேண்டும். 
விடுமுறை விடப்பட்டால் அதை ஈடுசெய்ய சனிக்கிழமை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம். திருவிழா போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை விடும்போது ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.
 

More from the section

அரசியல் பேச சந்திக்கவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நலம் விசாரிக்கவே சந்தித்தேன்: நடிகர் ரஜினிகாந்த்
சென்னை அருகே 44 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற அனுமதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி
சென்னை- கொல்லத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்