வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

நாடு முழுவதும் நிகழாண்டில் 87 புலிகள் இறப்பு

By கோபிகிருஷ்ணா, சென்னை| DIN | Published: 03rd December 2018 02:26 AM

நாடு முழுவதும் நிகழாண்டில் 87 புலிகள் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில், பல வேட்டையாடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவிலேயே அதற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 11 மாதங்களில் 6 புலிகள் உயிரிழந்திருக்கின்றன. இந்த இறப்பு விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாட்டில் மொத்தம் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், களக்காடு முண்டந்துறை, முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை என 4 காப்பகங்கள் உள்ளன. வனச்சூழலைக் காக்கும் வலிமையான விலங்காகக் கருதப்படும் புலிகள், அழிவின் விளிம்புக்குச் செல்வதைத் தடுத்து, அவற்றைக் காக்கும் நோக்கில் இந்த சரணாலயங்கள் அமைக்கப்பட்டன.
ஆனால், தோலுக்காகவும், பற்களுக்காகவும் புலிகள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வந்ததால் அதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
கடந்த 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டில் மொத்தமாக 1706 புலிகள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டது . தமிழகத்தைப் பொருத்தவரை 153 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது, சூழலியல் ஆர்வலர்களுக்கும், அரசுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. தற்போது புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அதுதொடர்பான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், புலிகளைக் காக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மறுபுறம் அவை வேட்டையாடுவது தொடர்ந்து கொண்டே வருவதாக கவலை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டைப் பொருத்தவரை நாடு முழுவதும் 115 புலிகள் இறந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் தமிழகத்தில் வெறும் 3 புலிகள் மட்டும்தான் இறந்ததாகக் கூறப்பட்டது. எண்ணிக்கையில் குறைவு என்று ஆறுதல் அடைந்தாலும், அவற்றில் ஒரு புலி மட்டுமே இயற்கையாக உயிரிழந்தது என்றும், மற்ற 2 புலிகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிகழாண்டுக்கான தரவுகளை ஆய்வு செய்த போது தமிழகத்தில் இதுவரை 6 புலிகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் முதுமலை சரகத்தில் ஐந்தும், நீலகிரியில் ஒன்றும் இறந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
பிற மாநிலங்களைப் பொருத்தவரை 81 புலிகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் 59 புலிகளின் இறப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:
வட மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு கும்பல்கள் புலி வேட்டையில் அதிகமாக ஈடுபடுகின்றன. ஊசி, பாசி விற்பனை செய்வதாகக் கூறி வனப்பகுதிகளுக்கு அருகே தங்கும் அவர்கள், சட்டவிரோதமாக புலிகளை வேட்டையாடுகின்றனர்.
இதைத் தவிர உள்ளூரைச் சேர்ந்த சிலரும் வேட்டை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியது:-
வனப்பகுதிக்குள் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது புலிகள் பாதுகாப்பில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
7 ஆண்டுகள்... 647 புலிகள்
கடந்த 2012 முதல் தற்போது வரை நாடு முழுவதும் 647 புலிகள் இறந்ததுள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவற்றில் 50 சதவீதம் மட்டுமே இயற்கையாக நேர்ந்த இறப்புகள் என்றும், மற்றவை வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டவை என்றும் தெரிகிறது.
நிகழாண்டில் தமிழகத்தில்...

More from the section

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது