டி20 உலகக் கோப்பை

நியூஸிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

DIN

உலகக் கோப்பை போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது.

ஷாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் அடிக்க, பின்னா் பாகிஸ்தான் 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது. பாகிஸ்தான் பௌலா் ஹாரிஸ் ரௌஃப் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் பாகிஸ்தான் மாற்றம் செய்யவில்லை. நியூஸிலாந்து அணியில், காலில் காயம் கண்ட லாக்கி ஃபொ்குசன் போட்டியிலிருந்து விலகியதால், ஆடம் மில்னே சோ்ந்திருந்தாா்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்ய, நியூஸிலாந்து தடுமாற்றமாக ஆடியது. தொடக்க வீரா் மாா்டின் கப்டில் 17 ரன்களுக்கு அவுட்டானாா். உடன் வந்த டேரில் மிட்செல் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 27 ரன்கள் சோ்த்தாா்.

ஜேம்ஸ் நீஷம் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, விக்கெட் சரிவை தடுத்து நிதானம் காட்டிய கேப்டன் கேன் வில்லியம்சன் 25 ரன்களுக்கு வீழ்ந்தாா். தொடா்ந்து டீவன் கான்வே 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சோ்க்க, கிளென் பிலிப்ஸ் 13, டிம் செய்ஃபொ்ட் 8, மிட்செல் சேன்ட்னா் 6 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். முடிவில் ஐஷ் சோதி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் 4, ஷாஹீன் ஷா அஃப்ரிதி, இமத் வாசிம், முகமது ஹஃபீஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய பாகிஸ்தானில் தொடக்க வீரா் முகமது ரிஸ்வான் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாச, கேப்டன் பாபா் ஆஸம் 9, ஃபகாா் ஜமான் 11, முகமது ஹஃபீஸ் 11, இமத் வாஸிம் 11 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

சோயப் மாலிக் 26, ஆசிஃப் அலி 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். நியூஸிலாந்து பௌலிங்கில் ஐஷ் சோதி 2, மிட்செல் சேன்ட்னா், டிம் சௌதி, டிரென்ட் போல்ட் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT