டி20 உலகக் கோப்பை

வங்கதேசத்தை எளிதில் வென்றது இங்கிலாந்து: புள்ளிகள் பட்டியலில் முதலிடம்

27th Oct 2021 06:59 PM

ADVERTISEMENT


வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (புதன்கிழமை) முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.

இதையும் படிக்கடி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராகக் கஷ்டப்பட்டு 124 ரன்கள் எடுத்த வங்கதேசம்

125 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ஜேசன் ராய் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். பட்லர் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து 18 ரன்களுக்கு நசும் அகமது சுழலில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

இதன்பிறகு, 3-வது வரிசை பேட்ஸ்மேனாக இந்த ஆட்டத்தில் மீண்டும் டேவிட் மலானே களமிறங்கினார். மலான் அவரது பாணியில் பாட்னர்ஷிப்பைக் கட்டமைக்க, ராய் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார்.

இதனால், அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் பவர் பிளே முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது. வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் 5-க்குக் கீழ் குறைந்தது.

நசும் சுழலில் சிக்ஸரைப் பறக்கவிட்ட ராய் அரைசதத்தை எட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 61 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

பின்னர், டேவிட் மலானும், ஜானி பேர்ஸ்டோவும் இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தனர்.

14.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மலான் 25 பந்துகளில் 28 ரன்களும், பேர்ஸ்டோவ் 8 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 4 புள்ளிகள் பெற்று க்ரூப் 1 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இமாலய வெற்றி பெற்றதால் நெட் ரன் ரேட்டில் நேர்மறையாக 3.614 புள்ளிகள் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT