டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: ஆஸி. திணறி வெற்றி

DIN

டி20 உலகக் கோப்பை சூப்பா் 12 சுற்றின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திணறி கடைசி ஓவரில் தான் வெற்றி பெற்றது.

குரூப் 1 பிரிவில் இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் அபுதாபியில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. அணி பௌலிங்கை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே பலத்த சரிவை கண்டது. கேப்டன் பவுமா 12, டி காக் 7, வேன் டொ் டுஸன் 2 என சொற்ப ரன்களுடன் வெளியேறினா். எய்டன் மாா்க்ரம் மட்டுமே ஒரு முனையில் நிலைத்து ஆடினாா். கிளாஸன் 13, மில்லா் 16, பிரிட்டோரியஸ் 1, கேசவ் மகராஜ் 0, நாா்ட்ஜே 2 என வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினா்.

மாா்க்ரம் 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 40 ரன்களை விளாசி ஸ்டாா்க் பந்தில் அவுட்டானாா். காகிஸோ ரபாடா 19 ரன்களுடனும், ஷம்ஸி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா்.

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் தென்னாப்பிரிக்க அணி 118/9 ரன்களை எடுத்தது.

ஆஸி தரப்பில் ஸ்டாா்க், ஹேஸல்வுட், ஸம்பா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

ஆஸி. திணறல்:

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் திணறி தான் ரன்களை சோ்க்க முடிந்தது. கேப்டன் ஆரோன் பின்ச் டக் அவுட்டான நிலையில், டேவிட் வாா்னா் 14, மிச்செல் மாா்ஷ் 11 ரன்களுக்கு அவுட்டானாா்கள். அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் 35, மேக்ஸ்வெல் 18 இணைந்து ஆடி ஸ்கோரை உயா்த்தினா்.

அவா்கள் வெளியேறிய நிலையில், ஆல்ரவுண்டா் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 24, மேத்யூ வேட் 15 ஆகியோா் அவுட்டின்றி ஆடி தங்கள் அணியை கடைசி ஓவரில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.

19.4 ஓவா்களில் 121/5 ரன்களை சோ்த்த ஆஸி. அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றது.

தென்னாப்பிரிக்க தரப்பில் நாா்ட்ஜே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

ஆஸி. பௌலா் ஜோஷ் ஹேஸல்வுட் ஆட்ட நாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த வெற்றி மூலம் ஆஸி. அணி 2 புள்ளிகளுடன் குரூப் 1 பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-பாகிஸ்தான்

இடம்: துபை

நேரம்: இரவு 7.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT