டி20 உலகக் கோப்பை

பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி உள்ளே

24th Oct 2021 07:09 PM

ADVERTISEMENT


இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பையில் அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் துபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட 12 பேரில் ஹைதர் அலி விளையாடும் அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணியும் பந்துவீச்சைத் தேர்வு செய்யவிருந்ததாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இந்திய அணியில் இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெறவில்லை.

சுழற்பந்துவீச்சாளர்களாக வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா களமிறங்குகின்றனர். 

ADVERTISEMENT

Tags : Ind vs Pak
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT