டி20 உலகக் கோப்பை

பாகிஸ்தான் மிரட்டலில் திணறும் இந்தியா: காப்பாற்றுவாரா கோலி?

24th Oct 2021 08:06 PM

ADVERTISEMENT


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையும் படிக்கபாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி உள்ளே

தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர். ஷஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோஹித் சர்மா கோல்டன் டக் அவுட் ஆனார். இதனால், ரன் குவிப்பதில் மந்த நிலை ஏற்பட்டது. 

ADVERTISEMENT

அப்ரிடி தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ராகுலையும் (3) போல்டாக்க மைதானம் அமைதியானது. 

ஆனால், அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதே ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சற்று நெருக்கடியைத் தணித்தார்.

இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் 5-வது ஓவரையும் அப்ரிடியே வீச அழைக்கப்பட்டார். ஆனால், கேப்டன் விராட் கோலி அந்த ஓவரில் சிக்ஸரைப் பறக்கவிட்டார்.

இதனால், ஆட்டத்தில் சற்று இந்தியாவின் கை ஓங்கத் தொடங்கியது.

இந்த நிலையில், பவர் பிளேவின் கடைசி ஓவரில் ஹசன் அலி அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் வந்த வேகத்தில் சூர்யகுமார் (11) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். ஆனால், மீண்டும் ஒரு முறை அதே ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து கோலி அசத்தினார்.

பவர் பிளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

கோலி 20 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

Tags : Afridi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT