டி20 உலகக் கோப்பை

நரைன் அணியில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது: மே.இ. தீவுகள் கேப்டன் பொலார்ட்

23rd Oct 2021 12:57 PM

ADVERTISEMENT

 

உலகம் முழுக்க விளையாடி வரும் நரைன் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெறாதது பெரிய இழப்பு என கேப்டன் பொலார்ட் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டியில் 14 ஆட்டங்களில் 62 ரன்கள் எடுத்த சுநீல் நரைன், பந்துவீச்சில் 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 6.44. எனினும் டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நரைன் இடம்பெறவில்லை. ஐபிஎல், சிபிஎல் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தாலும் 2019-லிருந்து சர்வதேச டி20 ஆட்டங்களில் நரைன் விளையாடவில்லை. நாங்கள் எதிர்பார்த்த உடற்தகுதி நரைனிடம் இல்லை என தேர்வுக்குழுத் தலைவர் ரோஜர் ஹார்ப்பர் விளக்கம் அளித்தார். 

டி20 உலகக் கோப்பை அணியில் நரைன் இல்லாதது பற்றி கேப்டன் பொலார்ட் கூறியதாவது:

ADVERTISEMENT

சுநீல் நரைனைப் பொறுத்தவரை அவர் அணியில் இல்லாதது இழப்புதான். ஐபிஎல், சிபில் என டி20 கிரிக்கெட்டில் அவருடைய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். எனவே அவர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு என ஒப்புக்கொள்கிறோம். அவர் அணியில் இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். இந்த நேரத்தில் அது துரதிர்ஷ்டவசமானதுதான். மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த நரைன் உலகம் முழுக்க விளையாடி வருகிறார். அவர் இல்லாத குறையை ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு நகரவேண்டும். அணியில் உள்ள 15 வீரர்களைக் கொண்டு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT