டி20 உலகக் கோப்பை

பாண்டியாவின் பேட்டிங்கும் பந்துவீச்சும்: என்ன சொல்கிறார் விராட் கோலி?

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆல்ரவுண்டர் பாண்டியா நிச்சயம் பந்துவீசுவார் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதவுள்ளன. இந்த ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகளில் (50 ஓவர், டி20) இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 12 முறை மோதியதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் பற்றி இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

பாகிஸ்தான் மிகவும் வலுவான அணி. நீண்ட நாளாகவே அவர்கள் வலுவான அணியாக உள்ளார்கள். அவர்களுக்கு எதிராகச் சிறப்பாக விளையாட வேண்டும். ஆட்டத்தின் போக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றக் கூடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளார்கள். இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்களை இன்று நான் சொல்லப்போவதில்லை. அனைத்து விதமான சூழலையும் எதிர்கொள்ளும் வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் எங்கள் வீரர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட தயாராக உள்ளார்கள். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஏதாவது ஒரு தருணத்தில் 2 ஓவர்களையாவது வீசும் அளவுக்கு உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார் ஹார்திக் பாண்டியா. அவர் பந்துவீசும் வரை இதர வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வோம். மற்றவர்கள் ஒரு ஓவர், இரண்டு ஓவர்கள் வீசக்கூடிய சில திட்டங்களை வகுத்துள்ளோம். 6-ம் நிலை வீரராக பாண்டியாவிடம் உள்ள திறமையை ஒரே இரவில் கொண்டுவர முடியாது. அதனால் தான் ஒரு பேட்டராக அவர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். சிறப்பாக விளையாடும்போது எதிரணியைத் திணறடித்து விடுவார். 6-ம் நிலை பேட்டராக அணிக்கு அவர் அளிக்கும் பங்களிப்பை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உலக கிரிக்கெட்டில் 6-ம் நிலை பேட்டராக அதற்கென தகுதி பெற்றவர்களே களமிறங்குகிறார்கள். பாண்டியாவால் தற்போது முடியாத ஒன்றை நாங்கள் வற்புறுத்த மட்டோம். சில ஓவர்கள் வீச அவர் ஆர்வமாக உள்ளார். அப்படி அவர் செய்யும்போது அணி இன்னும் சிறப்பாக விளையாடும். உலகக் கோப்பைப் போட்டிக்குச் செல்லும் முன்பு நம்பிக்கையுடன் உள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT