டி20 உலகக் கோப்பை

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை: 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு

23rd Oct 2021 02:53 PM

ADVERTISEMENT

 


இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவுள்ள 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகளில் (50 ஓவர், டி20) இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 12 முறை மோதியதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துள்ளது. 

இந்நிலையில் சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதவுள்ளன. இந்த ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது. இதிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டு இறுதியாக 11 பேர் விளையாடும் அணி நாளை அறிவிக்கப்படும். 

ADVERTISEMENT

பாகிஸ்தான் அணி

பாபர் அஸாம் (கேப்டன்), ஆசிப் அலி, ஃபகார் ஸமான், ஹைதர் அலி, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்),  இமாத் வாசிம், முகமது ஹபீஸ், ஷதாப் கான், சோயிப் மாலிக், ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அப்ரிடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT