டி20 உலகக் கோப்பை

இந்தியாவுக்கு எதிராக ஒரு நிமிடம் கூட இளைப்பாறக் கூடாது: பாகிஸ்தான் கேப்டன்

23rd Oct 2021 05:42 PM

ADVERTISEMENT

 

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து தோற்கும் நிலைமையை மாற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் கூறியுள்ளார். 

சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதவுள்ளன. இந்த ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகளில் (50 ஓவர், டி20) இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 12 முறை மோதியதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துள்ளது. 

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் பற்றி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் கூறியதாவது:

பாகிஸ்தான் அணியில் இடம்பெறும் 12 பேரை இன்று அறிவிக்கிறோம். 11 வீரர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும். உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தோற்றது என்பது எங்களைக் கடந்த ஒன்று. ஆட்ட நாளில் எங்கள் திறமையைப் பயன்படுத்தி வெற்றி பெற எண்ணுகிறோம். எந்த ஒரு சாதனையும் உடைக்கப்பட வேண்டியதே. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நிதானமான மனநிலையில் விளையாடி திறமையை வெளிப்படுத்துவோம். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள் பரபரப்பாக இருக்கும். ஒரு நிமிடம் கூட இளைப்பாறக் கூடாது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்றிலும் சிறந்து விளங்க வேண்டும். இங்கு வருவதற்கு முன்பு அணி வீரர்கள் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தோம். 1992 உலகக் கோப்பை வெற்றி குறித்து பேசினார். அணி வீரர்களின் உடல்மொழி அப்போது எப்படி இருந்தது என்பதைத் தெரிவித்தார் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT