டி20 உலகக் கோப்பை

ஆஸி. அபாரம்: முதல் ஆட்டத்தில் சொதப்பிய தெ.ஆ. பேட்டர்கள், 118/9

DIN

டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டம். முதல் ஓவரை பிரபல வீரர் ஸ்டார்க் வீசுகிறார்.

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா 2 பவுண்டரிகள் அடிக்கிறார். முதல் ஓவரிலேயே 11 ரன்கள். 

இதைவிடவும் அற்புதமான தொடக்கம் இருக்க முடியுமா?

இதற்குப் பிறகு நடந்ததை தெ.ஆ. கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க நினைப்பார்கள். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. 

முதல் ஓவரில் 11 ரன்கள் எடுத்ததுதான் இன்றைய தெ.ஆ. இன்னிங்ஸின் ஒரே சந்தோஷமான தருணமாக இருக்க முடியும். 2-வது ஓவரிலேயே பவுமாவை 12 ரன்களில் போல்ட் செய்தார் மேக்ஸ்வெல். 

பவர்பிளேயின் முடிவில் தெ..ஆ. அணி 3 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. 13 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள். அப்போது மார்க்ரமும் மில்லரும் நல்ல கூட்டணியை அமைத்திருந்தார்கள். இதற்குப் பிறகாவது மீண்டெழுந்து கெளரவமான ஸ்கோரை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரே ஓவரில் அந்த நம்பிக்கையைச் சிதைத்தார் ஸாம்பா. மில்லரை 16 ரன்களிலும் பிரேடோரியஸை 1 ரன்னிலும் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் கேஷவ் மஹாராஜா ரன் அவுட் ஆனார். 15-வது ஓவரின் முடிவில் 83/7. ஆரம்பத்தில் இதை எதிர்பார்த்திருக்க முடியுமா?

36 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணியின் ஒரே நம்பிக்கையாகத் திகழ்ந்த மார்க்ரம், 40 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது. பந்துவீசிய 5 ஆஸி. வீரர்களும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது எடுத்தார்கள். ஹேசில்வுட், ஸ்டார்க், ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் மேக்ஸ்வெல், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT