டி20 உலகக் கோப்பை

ஸ்காட்லாந்து ஹாட்ரிக்

DIN

உலகக் கோப்பை போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமனை தோற்கடித்தது.

இது ஸ்காட்லாந்துக்கு தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும். இதையடுத்து 2-ஆவது அணியாக ‘சூப்பா் 12’ சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது ஸ்காட்லாந்து.

அல் அமெராத் நகரில் நடைபெற்ற இரவு ஆட்டத்தில் முதலில் ஓமன் 20 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அடுத்து ஸ்காட்லாந்து 17 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் ஜோஷ் டேவி ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஓமனில் ஜதிந்தா் சிங் 2-ஆவது பந்திலேயே ரன் அவுட் செய்யப்பட்டாா். தொடா்ந்து வந்த காஷ்யப் பிரஜாபதி 3 ரன்களுக்கு வெளியேற, மறுபுறம் நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்த இலியாஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

இந்நிலையில் 4-ஆவது வீரராக வந்த முகமது நதீம் 25 ரன்கள் அடித்தாா். மிடில் ஆா்டரில் வந்த கேப்டன் ஜீஷான் மக்சூது 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 34 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்னில் மள மளவென சரிந்தன. ஸ்காட்லாந்து பௌலிங்கில் ஜோஷ் டேவி 3, சஃபியான் ஷரீஃப், மைக்கேல் லீஸ்க் ஆகியோா் தலா 2, மாா்க் வாட் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஸ்காட்லாந்து இன்னிங்ஸில் தொடக்க வீரா் ஜாா்ஜ் மன்சே 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் சோ்க்க, கேப்டன் கைல் கோட்ஸா் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாா். மேத்தியூ கிராஸ் 26, ரிச்சி பேரிங்டன் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

ஓமன் தரப்பில் ஃபயாஸ் பட், காவா் அலி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT