டி20 உலகக் கோப்பை

இரு பயிற்சி ஆட்டங்களிலும் தோல்வி: மீண்டு வருமா மேற்கிந்தியத் தீவுகள் அணி?

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக விளையாடிய இரு பயிற்சி ஆட்டங்களிலும் நடப்பு சாம்பியனான  மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

சூப்பர் 12-க்கு முன்பே தகுதி பெற்ற 8 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இந்திய அணி இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி இரு பயிற்சி ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ. தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது. அந்த ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணி 130/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் 30 ரன்கள் கூட எடுக்காமல் ஏமாற்றமளித்தார்கள்.

அடுத்த ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தானின் இரு தொடக்க வீரர்களும் அரை சதமெடுத்தார்கள். பதிலுக்கு மே.இ. தீவுகள் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேஸ் அரை சதமெடுத்தார். 

கடைசியாக டி20 உலகக் கோப்பை 2016-ல் நடைபெற்றது. அதில் சாம்பியனான மே.இ. தீவுகள் அணி, தற்போது இரு பயிற்சி ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. 

டி20 உலகக் கோப்பையை இருமுறை வென்ற ஒரே அணி என்கிற பெருமை மே.இ. தீவுகள் அணிக்குத்தான் உள்ளது. ஆனால் 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு விளையாடிய 67 ஆட்டங்களில் 24-ல் மட்டுமே வெற்றி பெற்ற மே.இ. தீவுகள் அணி 36-ல் தோல்வியடைந்துள்ளது. சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்ற 8 அணிகளில் குறைவான வெற்றி/தோல்வி விகிதம் (0.666) உள்ள அணி மே.இ. தீவுகள் அணி தான். 

நடப்பு சாம்பியன், இருமுறை டி20 உலகக் கோப்பை சாம்பியன் என்கிற பெருமைகளை உடைய மே.இ. தீவுகள் அணி 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் எப்படி விளையாடும் என்பது அனைவருக்கும் புதிரான ஒன்றாக உள்ளது. பயிற்சி ஆட்டங்களில் கிடைத்த தோல்விகளில் இருந்து அந்த அணி மீண்டு வருமா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT