டி20 உலகக் கோப்பை

ரோஹித் அதிரடி: இந்தியா மிரட்டல் வெற்றி!

DIN


ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று (புதன்கிழமை) ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

153 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர்.

இந்த இணை இந்தியாவுக்குச் சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்தது.

ஆடம் ஸாம்பா வீசிய 7-வது ஓவரில் ராகுல் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார். இதன்பிறகு சற்று மந்த நிலை ஏற்பட்டது. இதனால், பெரிய ஷாட்களை ஆட முயற்சித்து ராகுல் 39 ரன்களுக்கு ஆஷ்டன் அகார் சுழலில் வீழ்ந்தார்.

எனினும், ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடி காட்டி சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு ரன் ரேட்டை உயர்த்தினார். சூர்யகுமார் யாதவும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார். 36-வது பந்தில் அரைசதத்தையும் எட்டினார் ரோஹித் சர்மா. இதையடுத்து, 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா ரிடையர்ட் அவுட் முறையில் வெளியேறி, ஹார்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். 

கேன் ரிச்சர்ட்ஸன் வீசிய 18-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரியும், ஹார்திக் பாண்டியா 1 சிக்ஸரும் பறக்கவிட இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT