டி20 உலகக் கோப்பை

அஸ்வின் அபார பந்துவீச்சு: இந்தியாவுக்கு எதிராக 152 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா

DIN


இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. துபையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது 2-வது பயிற்சி ஆட்டத்தை இன்று விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இஷால் கிஷன் தேர்வானார்.

ஆரம்பத்தில் பந்துவீசிய அஸ்வின், ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் வார்னர் (1), மிட்செல் மார்ஷ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜடேஜா 8 ரன்களில் கேப்டன் ஃபிஞ்சை வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பிறகு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும் ஸ்மித்தும் அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். 37 ரன்களில் சஹார் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார் மேக்ஸ்வெல். கடைசிக்கட்டத்தில் ஸ்மித்தும் ஸ்டாய்னிஸும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்கள். ஸ்மித் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 2 ஓவர்கள் வீசி ஆச்சர்யப்படுத்தினார். வருண் சக்ரவர்த்தி 2 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT