டி20 உலகக் கோப்பை

டி 20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை

17th Oct 2021 04:19 PM

ADVERTISEMENT

கரோனா காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐசிசி டி 20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதியான இன்று தொடங்கும் டி20 உலகக் கோப்பையில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுவருகிறது.

இந்திய நேரப்படி 3:30 மணிக்கு ஓமனில் உள்ள அல் அமராத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஏழு ஓவர்களின் முடிவில், 47 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழுந்து பப்புவா நியூ கினியா அணி ஆடிவருகிறது.

16 அணிகள் பங்கேற்கும் டி - 20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள தகுதிச் சுற்று போட்டியிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

இதையும் படிக்க அடுத்த பயிற்சியாளா் ராகுல் திராவிட்

ADVERTISEMENT

இதில் ஏ பிரிவில் இலங்கை, நமிபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சூப்பர் 12 சுற்றில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு நுழையும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 24ம்தேதி துபாயில் எதிர்கொள்கிறது. அதற்கு முன் 2 பயிற்சி ஆட்டங்களில் இந்தியா ஆடுகிறது. நாளை இங்கிலாந்துடனும், 20ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT