டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: அணிகளின் கனவைக் கலைத்த 'டாஸ்'

15th Nov 2021 05:43 PM | எழில்

ADVERTISEMENT

 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணிகளின் வெற்றி, தோல்விக்கு முக்கியக் காரணமாக டாஸ் அமைந்துவிட்டதாக ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் கருதுகிறார்கள். 

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-இல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது. துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். எதிர்பார்த்தது போலவே இலக்கை வெற்றிகரமாக விரட்டி டி20 உலக சாம்பியனது ஆனது ஆஸ்திரேலியா. 

ADVERTISEMENT

இதனால் இறுதிச்சுற்று வரை அணிகளின் வெற்றி, தோல்வியில் டாஸ் முக்கியப் பங்காற்றியதாகப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் டாஸ் வென்ற பெரும்பாலான அணிகளும் பந்துவீச்சையே முதலில் தேர்வு செய்தன. 2-வதாகப் பந்துவீசிய பல அணிகள் பனிப்பொழிவுச் சிக்கலை எதிர்கொண்டு தோல்வியடைந்தன. இதனால் டாஸ் வென்ற பெரும்பாலான அணிகள் முதலில் பந்துவீசி பிறகு இலக்கை விரட்டவே முடிவெடுத்தன. அதேபோல பெரும்பாலான ஆட்டங்களில் 2-வதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றன. இரு அரையிறுதிகள், இறுதிச்சுற்றிலும் டாஸ் வென்ற அணிகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து, இலக்கை வெற்றிகரமாக விரட்டி சாதித்தன. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்று அபுதாபி, ஷார்ஜா, துபை என மூன்று பகுதிகளில் நடைபெற்றது. 

டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்ச், 7 ஆட்டங்களில் 6 டாஸை வென்றுள்ளார். 

அபுதாபியில் நடைபெற்ற 11 ஆட்டங்களில் டாஸ் வென்ற அணிகள் 7 முறை வெற்றி பெற்றுள்ளன.

ஷார்ஜாவில் நடைபெற்ற 9 ஆட்டங்களில் டாஸ் வென்ற அணிகள் 5 முறை வெற்றி பெற்றுள்ளன. 

துபையில் நடைபெற்ற 13 ஆட்டங்களில் டாஸ் வென்ற அணிகள் 11 முறை வெற்றி பெற்றுள்ளன. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெற்ற 45 ஆட்டங்களில் டாஸ் வென்ற அணிகள் 30 முறை வெற்றி பெற்றுள்ளன. 

சூப்பர் 12 சுற்று முதல் இறுதிச்சுற்று வரை நடைபெற்ற 24 ஆட்டங்களில் இலக்கை விரட்டிய 19 அணிகள் வெற்றி பெற்றுள்ளன. டாஸ் வென்ற 16 அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 

Tags : toss
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT