டி20 உலகக் கோப்பை

ஐசிசி டி20 உலகக் கோப்பை அணி: இந்திய வீரர்களுக்கு இடமில்லை!

15th Nov 2021 02:22 PM

ADVERTISEMENT

 

ஐசிசி டி20 உலகக் கோப்பை அணியில் இந்திய வீரர்கள் ஒருவருக்கும் இடமளிக்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-இல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது. துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் மிட்செல் மார்ஷ் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள். 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களைத் தேர்வு செய்து கனவு அணியின் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இதில் இந்திய வீரர்கள் யாரும் தேர்வாகாதது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாததாலும் இந்திய அணியை விடவும் இதர அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதாலும் ஐசிசி அணியில் எந்தவொரு இந்திய வீரரும் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, 12-வது வீரராகத் தேர்வாகியுள்ளார்.

ADVERTISEMENT

ஐசிசி டி20 உலகக் கோப்பை அணி

டேவிட் வார்னர்
ஜாஸ் பட்லர்
பாபர் ஆஸம்
சரித் அசலங்கா
மார்க்ரம்
மொயீன் அலி
ஹசரங்கா
ஆடம் ஸாம்பா
ஜோஷ் ஹேசில்வுட்
டிரெண்ட் போல்ட்
அன்ரிச் நோர்கியா

12-வது வீரர் - ஷாஹீன் அப்ரிடி

Tags : ICC T20 World Cup
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT