டி20 உலகக் கோப்பை

டேவிட் வார்னருக்குத் தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது நியாயமில்லை: சாஹித் அப்ரிடி

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு அளிக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-இல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது. துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் மிட்செல் மார்ஷ் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள். 

இந்நிலையில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தானின் பாபர் ஆஸமுக்குப் பதிலாக டேவிட் வார்னர் தொடர் நாயகனாகத் தேர்வானதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பாபர் ஆஸம், தொடர் நாயகன் விருதைப் பெறுவார் என ஆவலாக இருந்தேன். இந்த முடிவு நிச்சயமாக நியாயமில்லை என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடம் பிடித்துள்ளார். பாபர் ஆஸம் 303 ரன்களும் வார்னர் 289 ரன்களும் எடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT