டி20 உலகக் கோப்பை

வண்ணமயமாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: படங்கள்

15th Nov 2021 06:03 PM

ADVERTISEMENT

 

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-இல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது. 

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் மிட்செல் மார்ஷ் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT