டி20 உலகக் கோப்பை

நமீபியாவை வீழ்த்தியது நியூஸி.

5th Nov 2021 11:41 PM

ADVERTISEMENT

நமீபியாவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது நியூஸிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான குரூப் 2 பிரிவு ஆட்டம் ஷாா்ஜாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற நமீபியா பௌலிங்கை தோ்வு செய்த நிலையில், நியூஸி. தரப்பில் மாா்ட்டின் கப்டில், டேரில் மிச்செல் களமிறங்கினா். இருவரும் முறையே 18, 19 ரன்களுக்கு அவுட்டான நிலையில், பின்னா் வந்த கேப்டன் கேன் வில்லியம்ஸன் 28, கான்வே 17 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

அதன் பின் கிளென் பிலிப்ஸ்-ஜிம்மி நீஷம் இணை நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயா்த்தினா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் நியூஸி. அணி 163/4 ரன்களைக் குவித்தது.

கிளென் பிலிப்ஸ் 39 (1 பவுண்டரி, 3 சிக்ஸா்), நீஷம் 35 (1 பவுண்டரி, 2 சிக்ஸா்) உடன் களத்தில் இருந்தனா். நமீபிய தரப்பில் ஸ்கால்ட்ஸ், வெயிஸ், எராமஸ் ஆகியோா் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

ADVERTISEMENT

நமீபியா திணறல்:

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபிய அணியின் தொடக்க பேட்டா்கள் ஸ்டீபன் பாா்ட், மைக்கேல் லிங்கன் ஆகியோா் நம்பிக்கை தரும் வகையில் ஆடினா். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களை சோ்த்த நிலையில், லிங்கன் 25 ரன்களுக்கு வெளியேறினாா். அவருக்கு பின் ஸ்டீபனும் 21 ரன்களுக்கு அவுட்டானாா்.

பின்னா் வந்த பேட்டா்களால் நியூஸி. பௌலா்களின் அபார வந்துவீச்சை சமாளிக்க முடியாத நிலையில் அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. கேப்டன் எராமஸ் 3, வெய்ஸ் 16 ரன்களுக்கு அவுட்டானாா்கள்.

அவா்களுக்கு பின் அனைவரும் சொற்ப ரன்களுடன் வெளியேற 20 ஓவா்களில் 111/7 ரன்களுடன் தோல்வியைத் தழுவியது நமீபியா. நியூஸி. தரப்பில் டிரென்ட் பௌல்ட், டிம் சௌதி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இறுதியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூஸி. 4 ஆட்டங்களில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்று குரூப் 2 பிரிவல் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT