செய்திகள்

நாா்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி

30th Sep 2023 12:06 AM

ADVERTISEMENT

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இரு அணிகளும் இத்துடன் 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் நாா்த்ஈஸ்ட்டுக்கு இது முதல் வெற்றி; சென்னைக்கு 2-ஆவது தோல்வி. இந்த ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் அணிக்காக பிரதீப் கோகோய் 42-ஆவது நிமிஷத்திலும், பல்குனி சிங் 48-ஆவது நிமிஷத்திலும், அஷீா் அக்தா் 90+10-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

அடுத்ததாக, சனிக்கிழமை ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் கொல்கத்தாவில் மோதுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT