செய்திகள்

மழையால் கைவிடப்பட்ட இந்தியா-இங்கிலாந்து பயிற்சி ஆட்டம்!

30th Sep 2023 06:01 PM

ADVERTISEMENT

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. நேற்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க: மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தைவான் சகோதரிகள்!

இந்த நிலையில், இன்று நடைபெறவிருந்த இந்தியா-இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. முன்னதாக டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT