செய்திகள்

உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும்: ககிசோ ரபாடா

28th Sep 2023 03:36 PM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரின் முதன்மைப் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. முன்னதாக உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளன. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி முன்னேறியது இல்லை. 

இதையும் படிக்க: 24 வயதில் ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்!

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகக் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். உலகக் கோப்பையில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த உலகக் கோப்பை சவாலானதாக இருக்கப் போகிறது. ஆனால், போட்டிகள் உண்மையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமையப் போகிறது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT