செய்திகள்

ஒரு வாரத்தில் உலகக் கோப்பை: அவசரமாக நாடு திரும்பும் தென்னாப்பிரிக்க கேப்டன்!

28th Sep 2023 04:13 PM

ADVERTISEMENT

சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புகிறார்.

உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி தனது முதன்மையானப் போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. நாளை (செப்டம்பர் 29) நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும், அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியையும் தென்னாப்பிரிக்க அணி எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சொந்த காரணங்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும்: ககிசோ ரபாடா

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறியதாவது: தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளார். பயிற்சி ஆட்டங்களில் அணியை மார்கரம் வழிநடத்துவார். அக்டோபர் 7  ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டெம்பா பவுமா மீண்டும் அணியில் இணைவார் எனக் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT