செய்திகள்

150 பதக்கங்களைக் கடந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீனா!

28th Sep 2023 05:58 PM

ADVERTISEMENT

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 150-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி சீனாவின் ஹாங்ஸு நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி 5 நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், 150-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. 

இதையும் படிக்க: ஒரு வாரத்தில் உலகக் கோப்பை: அவசரமாக நாடு திரும்பும் தென்னாப்பிரிக்க கேப்டன்!

பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள கொரியாவைக் காட்டிலும் இருமடங்கு அதிகமான பதக்கங்களை சீனா வென்று குவித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா கிட்டத்தட்ட 300 பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியது. அப்போது சீனாவுக்கு போட்டியாக தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் விளங்கின. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே 2-வது மற்றும் 3-வது இடத்தில் சீனாவுக்குப் போட்டியாக உள்ளன.

ADVERTISEMENT

இதையும் படிக்க: உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும்: ககிசோ ரபாடா

பதக்கப் பட்டியலில்  153 பதக்கங்களுடன் (83 தங்கம், 46 வெள்ளி, 24 வெண்கலம்) சீனா முதல் இடத்திலும், 76 பதக்கங்களுடன்  (20 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம்) கொரியா இரண்டாவது இடத்திலும், 68 பதக்கங்களுடன் (16 தங்கம், 28 வெள்ளி, 24 வெண்கலம்) ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

25 பதக்கங்களுடன் (6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம்) இந்தியா பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT