ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி புதன்கிழமை ஹைதராபாத் வந்தது. அந்த அணி 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியா வந்துள்ளது.
19 வயதுக்கு உள்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து போட்டியின் அரையிறுதியில் நேபாளத்தை பெனால்ட்டி கிக் வாய்ப்பில் 3-2 என வீழ்த்திய இந்தியா, இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது.
28-ஆவது தேசிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப், புது தில்லியில் அக்டோபா் 2 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 5-0 என பிரேஸிலை வீழ்த்தி தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.