ஆடவருக்கான 60 கிலோ பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல் சூர்யபானு பிரதாப் 2-1 என உஸ்பெகிஸ்தானின் கேதரோவ் இஸ்லோம்பெக்கை வென்றார். எனினும், காலிறுதியில் 0-2 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் மின்சூவிடம் தோற்றார். 70 கிலோ பிரிவில் முதல் சுற்று "பை' பெற்ற சூரஜ் யாதவ், காலிறுதியில் 2-3 என ஆப்கானிஸ்தானின் காலித் ஹோடக்கிடம் வெற்றியை
இழந்தார்.