செய்திகள்

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா?

27th Sep 2023 03:57 PM

ADVERTISEMENT

காயம் காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமலிந்த நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனுக்கு வலது  முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பினார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவர் காயத்திலிருந்து மெல்ல குணமடைந்து வருவதற்குள் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. பின்னர், உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் அவர் இடம்பெற்றார். 

இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு 5-வது தங்கம்!

உலகக் கோப்பையின் முதன்மையான போட்டிகள் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அதற்கு முன்னதாக சில பயிற்சியாட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், காயம் காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமலிந்த நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அவர் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது தொடர்பாக கேன் வில்லியம்சன் பேசியதாவது: பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணம்.  முடிந்த வரை பயிற்சி ஆட்டங்களில் விளையாட  வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. நான் இப்போது ஓடுதல், ஃபீல்டிங் செய்தல், பேட் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறேன். அவற்றில் எனக்கு முன்னேற்றம் வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

இதையும் படிக்க: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

நியூசிலாந்து அணி செப்டம்பர் 29 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும், அக்டோபர் 2 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT