இந்திய ஆடவர் வாலிபால் அணி தனது கடைசி ஆட்டத்தில் 0-3 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டு, போட்டியில் 6-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. 3 செட்களிலும் பாகிஸ்தான் 25-21, 25-20, 25-23 என்ற கணக்கில் 1 மணி நேரம் 14 நிமிஷங்களில் வென்றது. அடுத்ததாக இந்திய மகளிர் அணி தனது ஆட்டத்தை சனிக்கிழமையிலிருந்து தொடங்குகிறது.