செய்திகள்

வாள்​வீச்சு: பவானி தேவி ஏமாற்​றம்

27th Sep 2023 04:37 AM

ADVERTISEMENT

 

மக​ளிர் தனி​ந​பர் சப்ரே பிரி​வில் கள​மி​றங்​கிய தமி​ழக வீராங்​கனை பவானி தேவி, குரூப் சுற்​றில் தன்னை எதிர்​கொண்ட 5 போட்டி​யா​ளர்​க​ளை​யுமே வென்​றார். முத​லில் சிங்​கப்​பூ​ரின் ஜூலியட் ஜி மின் ஹெங்​கை​யும் (5-2), அடுத்து சவூதி அரே​பி​யா​வின் அல்ஷ்னா அல்​ஹ​ம​தை​யும் (5-1) சாய்த்த பவானி தேவி, 3-ஆவது ஆட்டத்​தில் கரினா தோஸ்​பேவை (5-3) சாய்த்​தார். அடுத்த இரு மோதல்​க​ளில் உஸ்​பெ​கிஸ்​தா​னின் ஜேனாப் தயி​பெ​கோ​வா​வை​யும், வங்​க​தே​சத்​தின் ரோக்​சனா காட்டு​னை​யும் (5-1) வெற்றி கண்​டார். 
இத​னால் "பை' பெற்று காலி​று​திக்கு முந்​தைய சுற்​றுக்கு வந்த அவர், அதில் தாய்​லாந்​தின் டோங்​காவ் போகேவை வீழ்த்​தி​னார். எனி​னும் காலி​று​தி​யில் சீனா​வின் யாகி ஷாவி​டம் 7-15 என தோல்வி கண்டு போட்டி​யி​லி​ருந்து வெளி​யே​றி​னார். காலி​று​தி​யில் வெல்​லும் பட்சத்​தில் பவானி தேவிக்கு முதல் ஆசிய பதக்​கம் உறு​தி​யா​கி​யி​ருக்​கும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT