மகளிருக்கான 78 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் வெண்கலப் பதக்கச் சுற்றில் இந்தியாவின் துலிகா மான் 0-10 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியாவின் அமராய்கான் அதியாசுரெனிடம் தோல்வி கண்டார். முன்னதாக மக்காவின் கிங் லாமை வீழ்த்தி காலிறுதிக்கு வந்த அவர், அதில் ஜப்பானின் வகாபா டொமிடாவிடம் வெற்றியை இழந்தார். பின்னர் ரெபிசேஜ் சுற்றில் களமாடியபோது அமராய்கானிடம் தோற்றார். மற்றொரு இந்தியரான இந்துபாலா தேவி 78 கிலோ பிரிவில் தாய்லாந்தின் இகுமி ஒயிடாவிடம் வீழ்ந்தார். ஆடவருக்கான 100 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களம் கண்ட அவதார் சிங் காயம் காரணமாக விலகினார்.