ஸ்ட்ரீட் ஃபைட்டர் நாக்-அவுட் சுற்றில் இந்தியாவின் அயன் பிஸ்வாஸ், மயங்க் அகர்வால் ஆகியோர் தோல்வி கண்டனர். முன்னதாக அயன் பிஸ்வால் முதல் சுற்றில் 2-0 என வியத்நாமின் குயென் கானை வீழ்த்தி, மற்றொரு சுற்றில் சவூதி அரேபியாவின் அப்துல் ரஹ்மான் சலீமிடம் 1-2 என தோற்றார். அடுத்து மீண்டும் வியத்நாமின் குயெனுடனான சுற்றில் வென்ற அயன், இறுதியாக ஹாங்காங்கின் யெ மான் ஹோவிடம் வீழ்ந்து ரவுண்ட் ஆஃப் 16 உடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.
மறுபுறம் மயங்க் அகர்வால் முதலில் 1-2 என சவூதி அரேபியாவின் ரஜிகான் தலாலிடம் தோற்றார். அடுத்தும் 0-2 என கத்தாரின் அல் மனாய் அப்துல்லாவிடம் வீழ்ந்தார். அடுத்தடுத்த தோல்விகளால் அவரும் ரவுண்ட் ஆஃப் 32 உடன் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.