இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
முதல் இரண்டு போட்டிகளிலும் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கே.எல்.ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடியது.
இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இதையும் படிக்க | சர்வதேச டி20-ல் 314 ரன்கள்! நேபாளம் படைத்த உலக சாதனைகள் என்னென்ன?
ராஜ்கோட்டில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி
ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.