செய்திகள்

ஆசிய விளையாட்டு: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் ஜோடி!

27th Sep 2023 08:32 PM

ADVERTISEMENT

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் - சகேத் இணை அரையிறுதிக்கு முன்னேறியது. 

சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், இன்று (செப். 27) நடைபெற்ற டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் - சகேத் மைனேனி இணை சீனாவைச் சேர்ந்த யீபிங் வூ - ஸின் ஸென்ஜாங் இணையுடன் மோதியது. 

ADVERTISEMENT

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 6-1, 7-6 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கு இந்திய இணை முன்னேறியுள்ளது. இதனால் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT