ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் ஒற்றையர் பிரிவு வீராங்கனைகள் தங்கமும், வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
மகளிருக்கான 50 மீ. பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற ஷிஃப்ட் சம்ரா தங்கமும், அதே பிரிவில் ஆஷி சௌக்சி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஷிஃப்ட் சம்ரா 469.6 புள்ளிகளும், ஆஷி சௌக்சி 451.9 புள்ளிகளும் பெற்று பதக்கத்தை கைப்பற்றினர்.
முன்னதாக, இன்று காலை நடைபெற்ற 25 மீ. பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் மூவர் அணி தங்கப் பதக்கத்தையும், 50 மீ. ரைஃபில் சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!
இதன்மூலம் 5 தங்க உள்பட 18 பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.