செய்திகள்

துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளி வென்றார் ஆனந்த் ஜீத் சிங்!

27th Sep 2023 08:12 PM

ADVERTISEMENT


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ஆனந்த் ஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவின் ஆனந்த் ஜீத் சிங் 58 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.  

ADVERTISEMENT

குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல்ரஷீத் என்பவர் 60 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். கத்தார் நாட்டைச் சேர்ந்த நாஸர் அல்-அட்டியா 46 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். 

இதேபோன்று பெண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் 34 புள்ளிகளைப் பெற்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT