ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்று சீனாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி சாதனைப் படைத்துள்ளார்.
19 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்கின. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் வென்று சீனாவைச் சேர்ந்த குயி சென்ஷி என்ற 13 வயது சிறுமி இன்று (செப்டம்பர் 27) சாதனைப் படைத்துள்ளார்.
குயி சென்ஷி சீனா சார்பில் கலந்து கொள்ளும் மிகவும் இளம் பங்கேற்பாளர் ஆவார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சக சீன வீராங்கனையை வீழ்த்தி ஸ்கேட்டிங் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவும் அவர் தகுதி பெற்றார்.