செய்திகள்

பென் டக்கெட் சதம் வீண்: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து -அயர்லாந்து போட்டி! 

26th Sep 2023 08:37 PM

ADVERTISEMENT

 

அயர்லாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது போட்டியில் இங்கிலாந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

3வதுப் போட்டியில் அயர்லாந்து டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செயத்து. இங்கிலாந்து அணியின் பிலிப் சால்ட் முதல் ஓவரிலேயே டி20 கிரிக்கெட் போல அடித்து ஆடினார். 4,4,4,6 என அதிரடியாக தொடங்கினார். முதல் ஓவரிலேயே 19 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி . பிலிப் சால்ட்டுடன் வில் ஜாக்ஸும் சேர்ந்து அதிரடியாக ஆடினார். 

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. இதுதான் இங்கிலாந்தின் அதிவேகமாக 100 ரன்களை எட்டிய போட்டியாக உள்ளது. 

ADVERTISEMENT

நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிராக 2015இல் 6.3 ஓவர்களுக்கு 100 ரன்கள் எடுததே இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஒரு அணி 100 ரன்களை கடந்ததாக உள்ளது.

பென் டக்கெட் 107 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் 31 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் (280/4) மழை அதிகரித்தது. பின்னர் மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதன் மூலம் தொடரினை 1-0 இங்கிலாந்து அணி வென்றுள்ளது. 

மழை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணி ஒருநாளில் அதிகபட்ச ரன்களைகூட அடித்திருக்க வாய்ப்பிருந்தது. ஏற்கனவே 2022இல் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 498/4 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT